காய்ச்சல் வந்துவிட்டாலே போதும் “டெங்கு ஜூரமாக இருக்குமோ” என்ற பயம் மக்களிடையே இருந்து வருகிறது.
மழைக்காலம் என்பதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்கிறது.
கொசுவினால் ஏற்படும் இந்த டெங்குவை விரட்ட மருத்துவர்களால் மற்றும் அரசால் கூட பரிந்துரை
செய்யப்படும் இந்த நிலவேம்பு கசாயம்.
அரசு மருத்துவமனைகளில் இந்த நிலவேம்பு குடிநீர் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
மழைக்காலத்தில் அபரிமிதமாகப் பெருகும் கொசுக்களால் உண்டாக்கப்படும் டெங்கு காய்ச்சல் இப்போது மக்களிடையே பரவிக்கிடக்கிறது.
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு கசாயத்தை எவ்வாறு தயார் செய்வது என்பதைப்பார்ப்போம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்புவை வாங்கி 5 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 2 டம்ளராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.
சிறுக்குழந்தைகளாக இருந்தால் சிறிது வெல்லம் கலந்து குடிக்கலாம்.
பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம்.
12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிலவேம்பு குடிநீர் (30-50 மி.லி.), இரண்டு வேளை குடிக்கலாம். 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின் படி அருந்தலாம்.
தொடர்ந்து காய்ச்சல் உள்ளவரை இதனை குடிக்க கொடுக்கலாம்.
வேப்பிலையைப் போலவே, நோய்களை விரட்டும் தன்மையை உடையது இந்த நிலவேம்பு.
நிலவேம்புடன், டெங்கு காய்ச்சலைக் கட்டுப் படுத்தப் பப்பாளி , மலை வேம்பு இலைச்சாறுகள் பயன்படுகிறது.
டெங்குவால் விரைவாகக் குறையும் ரத்தத் தட்டுகள் (platelets), ரத்த வெள்ளை அணுக்களின் (white blood cells) எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
எனவே மக்கள் கூடும் பொதுவிடங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி டெங்குவை விரட்டுவோம்.